Recent Post

6/recent/ticker-posts

இந்திய கடற்படையின் பணியாளர் சேவை கட்டுப்பாட்டாளராக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார் / Vice Admiral Krishna Swaminathan has taken charge as the Controller of Personnel Services of the Indian Navy

  • வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஏப்ரல் 17-ந் தேதி இந்திய கடற்படையின் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். 
  • 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பணியில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணராவார். அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். 
  • இங்கிலாந்தின் ஸ்ரீவென்கம் இணைப்படைப்பிரிவு கல்லூரி, கராஞ்சா கடற்படை கல்லூரி, அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயின்று தேர்ச்சிபெற்றார்.
  • அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற அவர், ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் மைசூர்; விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
  • பதவி உயர்வு பெற்று, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) அவர் பணியாற்றினார். இந்திய கடற்படையில் அனைத்து பயிற்சிகளையும் நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். 
  • பல்வேறு பதவிகளை வகித்த அவர், மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
  • அட்மிரல் சுவாமிநாதனின் கல்வித் தகுதிகளில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம்; கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்புகளில் முதுநிலை அறிவியல் பட்டம்; லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் எம்.ஏ; மும்பை பல்கலைக்கழகத்தில் உத்தி ஆய்வுகளில் எம்ஃபில்; மும்பை பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் முனைவர் பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel