ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் மகத்தான சாதனை படைக்கும் அணி, வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் லாரியஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த வண்ணமயமான விழாவில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
தலைசிறந்த அணியாக, மெஸ்ஸி தலைமையில் உலக கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி தேர்வு செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் சிறந்த அணி மற்றும் சிறந்த வீரர் என 2 லாரியஸ் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.
0 Comments