தாஷ்கன்டில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் பல்கேரியாவின் ஜே டயஸ் இபனேஸ் உடன் நேற்று மோதிய இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் (75 கி.) துரதிர்ஷ்டவசமாக முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இதனால் அவர் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்றொரு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் தீபக் போரியா (51 கி.), பிரான்ஸ் நட்சத்திரம் பிலால் பென்னமாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
0 Comments