Recent Post

6/recent/ticker-posts

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் - பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் / Rs 30,000 crore loan to SHGs - MoU with State Bank of India

  • மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
  • அக்குழுக்களின் பொருளாதார சுயசார்புக்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்புவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
  • இதை செயல்படுத்தி, சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எட்டவும், சுயஉதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதன் ஒருபகுதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினியும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel