Recent Post

6/recent/ticker-posts

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 40வது சீசன் / ASIAN BADMINTON CHAMPIONSHIP 2023

  • துபாயில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 40வது சீசன் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆங் யேவ் சின், டியோ ஈ யி ஜோடியை எதிர்கொண்டது. 
  • முதல் செட்டை 16-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
  • வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 8-11 என பின்தங்கி இருந்த இந்திய ஜோடி, பின் சுதாரித்துக் கொண்டு 21-19 என தன்வசப்படுத்தியது. 
  • ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அபாரமாக ஆடிய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 21-17, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • இதன்மூலம் ஆசிய பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது. 
  • இதற்கு முன், ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் திபு-ராமன் கோஷ் (1971), பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஷ்வினி பொன்னப்பா (2014), கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ரான்கன்-சரோஜினி (1965), ஷேக்-கர்னிக் (1965) ஜோடிகள் தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தன.
  • தவிர இது, 58 ஆண்டுகளுக்கு பின் ஆசிய பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். கடைசியாக 1965ல் ஒற்றையரில் இந்தியாவின் தினேஷ் கண்ணா தங்கம் வென்றிருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel