கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.
ஏவுகணைகளை வீசும்திறன் வாய்ந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ்ஏவுகணையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.
0 Comments