Recent Post

6/recent/ticker-posts

நிதி ஆயோக் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் / Niti Aayog 8th Board Meeting

TAMIL

  • 2023 மே 27-ம் தேதியன்று, புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில், ‘மேம்பட்ட இந்தியா @ 2047: ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு' என்ற கருப்பொருளில் நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
  • இந்தக் கூட்டத்தின்போது, (i) மேம்பட்ட இந்தியா @ 2047, (ii) எம்எஸ்எம்இக்களின் வளர்ச்சி, (iii) உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv) இணக்கங்களைக் குறைத்தல், (v) பெண்களுக்கு அதிகாரமளித்தல், (vi) திறன் மேம்பாடு (viii) வட்டார வளர்ச்சி ஆகிய எட்டு தலைப்புகளில் நாள் முழுவதும் விவாதிக்கப்படும்.
  • இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். நிதி ஆயோக் தலைவர் என்ற முறையில், பிரதமர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
  • உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியை அடையக்கூடிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
  • இந்தியாவின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இந்த 8-வது ஆட்சிக்குழு கூட்டம், மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், 2047-ம் ஆண்டில் மேம்பட்ட இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான ஒற்றுமையை உருவாக்குவதற்கும் தளத்தை வழங்கும்.

ENGLISH

  • The 8th Governing Council meeting of NITI Aayog will be held on 27th May 2023 at the New Convention Center at Pragati Maidan, New Delhi on the theme 'Better India @ 2047: Role of a United India'.
  • During this meeting, the day will focus on eight topics: (i) Improved India @ 2047, (ii) Development of MSMEs, (iii) Infrastructure and Investments, (iv) Reducing Conformities, (v) Empowering Women, (vi) Skill Development (viii) Community Development. will be discussed throughout.
  • Chief ministers of all states and union territories will participate in this meeting. The Prime Minister, as Chairman of the Niti Aayog, will preside over the meeting.
  • As the world's fifth largest economy and most populous country, India is on an economic growth trajectory that is likely to achieve rapid growth over the next 25 years.
  • India's development is closely linked with the development of states. This 8th Cabinet meeting will provide a platform to strengthen Central-State Government cooperation and build unity towards achieving the goal of a developed India by 2047.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel