தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M. K. Stalin launched the Tamil Nadu Champions Foundation and released the logo for the Chief Minister's Cup.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்து முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023க்கான வீரன் சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை வெளியிட்டார்.
2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, பல்வேறு தேசிய சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகையாக 1,594 பேருக்கு ரூ.43 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
0 Comments