பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M. K. Stalin released an awareness booklet on colon cancer
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.5.2023) தலைமைச் செயலகத்தில், உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு (World Gastrology Organisation), தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் (Tamil Nadu Gastroenterologist Trust) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது
0 Comments