மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு எம்எஸ்எஸ் கெலினா (MSS GALENA) என்ற கப்பல், கட்டுமானம் மற்றும் ஜவுளிப் பொருட்களைக் கொண்ட 270 கண்டெய்னர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இரு நாடுகளின் உறவுகள் மேம்படுவதற்கு இந்த கப்பல் சேவை உதவும்.
இந்த கப்பலானது மாதத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது. இந்த கப்பல் 421 சரக்கு பெட்டகங்கள் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
வெள்ளிக்கிழமை புறப்பட்ட சரக்கு கப்பல், ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தைச் சென்றடையும். இந்திய கப்பல் கழகத்தால் இந்த சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments