Recent Post

6/recent/ticker-posts

G20-யின் ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு முதல் வரைவு கொள்கை அறிக்கை / First Draft Policy Statement by the Startup20 Engagement Group of the G20 /

  • இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் உள்ள ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு அதன் கொள்கை அறிக்கையின் முக்கிய பரிந்துரை மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களின் முதல் வரைவை வெளியிட்டுள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் ஸ்டார்ட்அப்20-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவுக் கொள்கை அறிக்கையைக் காணலாம். https://www.startup20india2023.org. என்ற இணைப்பில் இந்த ஆவணம் பொதுப்பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
  • 2023 மே 27-ம் தேதி வரை இந்த வரைவுக் கொள்கை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இந்த கொள்கை அறிக்கையின் இறுதிப் பதிப்பு, உலகம் முழுவதிலும் இருந்து வந்த மதிப்புமிக்க உள்ளீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு

  • ஸ்டார்ட்அப்20 ஈடுபாட்டுக் குழு என்பது ஜி-20 கட்டமைப்பிற்குள் இருக்கும் ஒரு பிரத்யேக தளமாகும். இது உரையாடலை எளிதாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 
  • பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு, உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த முயற்சிக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel