Recent Post

6/recent/ticker-posts

கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம் / Karnataka Police chief Praveen Soot appointed as new CBI director

  • மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
  • இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. 
  • இதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
  • இதில் இப்போது கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) உள்ள பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 
  • இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் நேற்று மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
  • ஐஐடி-டெல்லி பட்டதாரியான பிரவீன் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர்மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். 
  • குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel