மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உணவுகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு / Ministry of Home Affairs has decided to introduce small grains in the diet of Central Armed Police Forces and National Disaster Response Force
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023-ல் மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உணவுகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அனைத்து படையினருடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான விவாதத்திற்கு பிறகு உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா கேட்டுக் கொண்டதன்படி உணவுகளில் 30 சதவீதம் அளவிற்கு சிறுதானியங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உள்நாடு மற்றும் உலக அளவில் சிறுதானியங்களின் தேவையை ஏற்படுத்தி மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கவும் மத்திய அரசின் முயற்சியின் காரணமாக 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐநா அறிவித்தது.
0 Comments