Recent Post

6/recent/ticker-posts

தமிழக அரசு - ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து / The MoU between Tamil Nadu Government and Hyundai was signed in the presence of the Chief Minister

  • தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 
  • நிகழ்ச்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் (இந்தியா) தலைமைச் செயல் அலுவலர் உன்சூ கிம் பரிமாறிக் கொண்டனர்.
  • இந்நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், ஹூண்டாய் கார்ப்பரேட் விவகாரங்கள் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், நிதிப் பிரிவு துணைத் தலைவர் டி.சரவணன், கார்ப்பரேட் விவகாரங்கள் இணை துணை தலைவர் புனீத் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • தமிழக அரசு - ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 1.78 லட்சம்பேட்டரி அசம்பிள் செய்யும் வகையில் தொழிற்சாலை, அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைத்தல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை 8.50 லட்சம் வாகனங்களாக உயர்த்துதல், மின்சார வாகனங்கள் தயாரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel