Recent Post

6/recent/ticker-posts

பிரம்மபுத்ராவில் உள்ள ஏழு சமயத்தலங்களை இணைக்கும் ‘நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலா’வுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU for 'River Based Circuit Religious Tourism' connecting seven religious sites of Brahmaputra

  • அசாமின் குவாஹத்தியில், இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையம், சாகர் மாலா மேம்பாட்டுக்கழகம், அசாம் சுற்றுலா மேம்பாட்டுக்கழகம், அசாம் மாநில உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் போக்குவரத்துத்துறை ஆகியவற்றுக்கிடையே நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலா’வுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அசாமில் நதிநீர் சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயத்தை திறப்பதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்த நிகழ்வில் அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆகியோர் பங்கேற்றனர்.
  • குவாஹத்தியை சுற்றியுள்ள ஏழு வரலாற்றுச் சிறப்புமிக்க சமயத்தலங்களுக்கு இடையே விரும்பும் இடத்தில் ஏறி, விரும்பும் இடத்தில் இறங்கும் நவீன படகுச் சேவைக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. 
  • காமாக்யா, பாண்டுநாத், அஸ்வத்க்லந்தா, டோல் கோவிந்தா, உமானந்தா, சக்ரேஸ்வர், ஆனியாத்தி சத்ரா ஆகியவை இந்த ஏழு இடங்களாகும்.
  • இந்தத் திட்டம் 12 மாதங்களுக்குள் ரூ. 45 கோடி முதலீட்டில் பூர்த்தி செய்யப்படும். அனுமான் கட் என்ற இடத்தில் இருந்து உசன் பசார் வரையிலான இந்த சுற்றுவட்டப் படகுச்சேவை முழுவட்டத்தை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்யும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel