Recent Post

6/recent/ticker-posts

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு / No ban on Jallikattu - Supreme Court Constitutional Bench Verdict

  • தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்றும் மாட்டுவண்டிப் பந்தயங்களை தடையின்றி நடத்தும் வகையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. 
  • இதேபோல, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் எருமை மாடுகளை வைத்து நடத்தப்படும் கம்பாலா போட்டிகளையும், மாட்டுவண்டிப் பந்தயங்களையும் தடையின்றி நடத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
  • இவற்றை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
  • இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது.
  • இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ''தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு, குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியிருப்பது சட்டப்பூர்வமானது. 
  • மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்குப் பிறகுதான், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் கொண்டுவந்த சட்டத் திருத்தங்கள் செல்லும். இந்த விதிகள் கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
  • சில புகைப்படங்களையும், உயிரிழப்புச் சம்பவங்களையும் முன்வைத்து, ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது எவரும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. 
  • அப்படியிருக்கும்போது, இந்த விளையாட்டை, கொடூர விளையாட்டு என்று கூறமுடியாது. குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளிலும்கூட உயிரிழப்புகள் நேரிடுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel