குடியரசுத்தலைவர் ஹத்பத்ராவில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் போதையில்லா ஒடிசா பிரச்சாரத்தைத் தொடங்கினார் / The President launched the Drug Free Odisha campaign at the Brahma Kumaris Centre, Hadbhadra
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஹத்பத்ரா பகுதியில் மயூர்பஞ்சில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தை இன்று (மே 4, 2023) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ‘’போதைப் பழக்கம் என்பது ஒரு நோய். இது சமூகம், பொருளாதாரம், உடல் மற்றும் மனதிற்குச் சாபம். போதைப் பழக்கம் குடும்பத்திலும், சமூகத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பஹத்பூர் கிராமத்தை அடைந்து மறைந்த ஸ்ரீ ஷயம் சரண் முர்முவுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிராமத்தில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
0 Comments