Recent Post

6/recent/ticker-posts

ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் 2023 / Third meeting of the G20 Digital Economy Working Group 2023


TAMIL

  • ‘ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின்’ மூன்றாவது கூட்டம் 2023 ஜூன் 14 அன்று புனேவில் நிறைவடைந்தது. உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாடு, உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி ஆகியவை இந்த 3 நாள் கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தன. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது.
  • ஜூன் 12, 13 தேதிகளில் நடைபெற்ற உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் 250-க்கும் அதிகமான பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டனர். இவர்களில் 50 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகளும் அடங்குவர்.
  • 200-க்கும் அதிகமானோர் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். இந்தப் பணிக் குழுக் கூட்டத்தின் போது வெற்றிகரமான டிஜிட்டல் தேர்வுகள் அமலாக்கத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா, சியரா லியோன், சுரிநாம், ஆன்ட்டிகுவா, பர்புடா ஆகிய நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் உலகளாவிய 60 நிபுணர்கள் பங்கேற்று 10 முக்கியமான அமர்வுகளில் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இந்த அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டவற்றை https://www.indiastack.global/global-dpi-summit/ என்ற இணையதளத்தில் காணலாம்.
  • ஜூன் 12 முதல் 14 வரை உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி நடைபெற்றது. டிஜிட்டல் அடையாளம், விரைவு பணப்பரிவர்த்தனை, டிஜிலாக்கர், மண்வள அட்டை, தேசிய இ-வேளாண் சந்தை, டிஜிட்டல் முறையில் மொழிமாற்றம் போன்ற 14 அனுபவத் தளங்களில் டிஜிட்டல் கட்டமைப்பின் வெற்றிகரமான அமலாக்கம் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. 
  • புனே நகரைச் சேர்ந்த தொழில்முறையாளர்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், உள்பட ஏராளமானோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
  • டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தை 2023 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ENGLISH

  • The third meeting of the 'G20 Digital Economy Working Group' concluded on June 14, 2023 in Pune. The Global Common Digital Infrastructure Summit and Global Common Digital Infrastructure Expo were the highlights of the 3-day meeting. A meeting was held with representatives of G-20 countries, guest countries and representatives of international organizations.
  • More than 250 delegates attended the Global Common Digital Framework Summit on 12th and 13th June. These included 150 delegates from 50 countries. More than 200 people participated via video. 
  • During this working group meeting, India signed MoUs with USA, Sierra Leone, Suriname, Antigua and Barbuda to share successful implementation of digital exams.
  • 60 experts from around the world participated in this Common Digital Architecture Summit and exchanged ideas in 10 keynote sessions. Recordings of these sessions are available at https://www.indiastack.global/global-dpi-summit/.
  • The Global Common Digital Architecture Exhibition was held from June 12 to 14. The exhibition showcased the successful implementation of digital architecture across 14 experience platforms such as Digital Identity, Quick Money Transfer, DigiLocker, Soil Card, National e-Agriculture Market, Digital Translation. A large number of people including professionals, youth and senior citizens from Pune visited the exhibition.
  • The fourth meeting of the Digital Economy Task Force and the Digital Economy Ministers' Meeting are scheduled to be held in Bengaluru in August 2023.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel