இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், கலவையான கற்பித்தல் பின்னணியில் அடிப்படையான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிசெய்வது குறித்த கருத்தரங்கு புனேயில் சாவித்திரி பாய் புலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கு ஜி20 நான்காவது கல்விப் பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மத்திய கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங் இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
மகாராஷ்டிரா மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சர் திரு சந்திரகாந்த் பாட்டில் உட்பட ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அமைப்புகளின் அலுவலர்களும், மத்திய மற்றும் மாநில கல்வித்துறைகளின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கையொட்டி கல்வியில் சிறந்த நடைமுறைகள், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, டிஜிட்டல் முன்முயற்சிகள், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் பலவகை ஊடகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுனிசெஃப், என்சிஇஆர்டி, நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்திய அறிவு முறைகள் பிரிவு (ஐகேஎஸ்), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உட்பட 100-க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை இந்தக் கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தன. ஜூன் 17 அன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி (ஜூன் 19 தவிர) ஜூன் 22 வரை நடைபெறும்.
0 Comments