Recent Post

6/recent/ticker-posts

2,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நாடு முழுவதும் மலிவுவிலை மக்கள் மருந்தகங்களைத் தொடங்க அனுமதி / 2,000 Primary Agricultural Co-operative Societies allowed to set up affordable population dispensaries across the country

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நாடு முழுவதும் மலிவுவிலை மக்கள் மருந்தகங்களைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. 
  • புதுதில்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் மத்திய சுகாதாரம், உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி நாடு முழுவதும் உள்ள 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு மலிவு விலை மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 1000 மலிவுவிலை மருந்தகங்களும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எஞ்சிய 1000 மலிவுவிலை மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும். 
  • மத்திய அரசின் இந்த முக்கியமான முடிவு, கூட்டுறவு சங்கங்களுக்கான வருவாயை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும். 
  • இன்றைய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சக செயலாளர், ரசாயனம் மற்றும் உரத்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  • தற்போது நாடு முழுவதும் 9,400க்கும் மேற்பட்ட பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,800 வகை மருந்துகள் 285 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
  • இந்த மலிவு விலை மருந்தகங்களில் பிரபல நிறுவனங்களின் மருந்துகள், 50 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது இதன் சிறப்பம்சம்.
  • இந்த மருந்தகங்களைத் தொடங்க பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு பெற்ற தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு படித்த நபர்களைக்கொண்ட தனியார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும், தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் தகுதிபெற்றவையாகும். 
  • இதற்கு குறைந்தபட்சம் 120 சதுர அடி இடவசதியை சொந்தமாக கொண்டவர்களும், வாடகைதாரர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக மகளிர் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்கலாம். 
  • மலிவு விலை மருந்தகங்களுக்கு ஊக்கத்தொகையாக அதிகபட்சமாக மாதந்தோறும் 15,000 வீதம் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel