Recent Post

6/recent/ticker-posts

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 / WORLD TEST CHAMPIONSHIP 2023

  • ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மோதியது. 
  • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன் குவித்தது. ஹெட் 163, ஸ்மித் 121, வார்னர் 43, கேரி 48 ரன் விளாசினர். 
  • அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 173 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 84.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 444 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 234 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 
  • 209 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடி 'கதாயுதம்' வடிவிலான கோப்பை மற்றும் முதல் பரிசாக ₹13.22 கோடியை தட்டிச் சென்றது. 
  • முதல் இன்னிங்சில் 163 ரன் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா ₹6.60 கோடியுடன் திருப்தி அடைந்தது. 
  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி உலக கோப்பை டி20 என அத்தனை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா வசப்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel