Recent Post

6/recent/ticker-posts

22 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான சுரங்க ஆணைகளை நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டது / Ministry of Coal issued mining orders for 22 coal mines

  • வணிக நிலக்கரிச் சுரங்க ஏலத்தின் கீழ் 22 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஆணைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 22 நிலக்கரிச் சுரங்கங்களில், பதினொரு சுரங்கங்கள் நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2015-இன் கீழ் உள்ளன.
  • மீதமுள்ள சுரங்கங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 இன் கீழ் உள்ளன. பதினாறு நிலக்கரிச் சுரங்கங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட சுரங்கங்கள் ஆகும். ஆறு சுரங்கங்கள் பகுதியாக ஆய்வு செய்யப்பட்டவை ஆகும்.
  • 22 நிலக்கரிச் சுரங்கங்களின் ஒட்டுமொத்த உச்ச மதிப்புத் திறன் ஆண்டுக்கு 53 மில்லியன் டன் ஆகும். இந்த சுரங்கங்கள் மூலம் ஆண்டு வருமானமாக ரூ. 9,831 கோடி கிடைக்கும். ரூ.7,929 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 71,467 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்த 22 நிலக்கரிச் சுரங்கங்களை ஒப்படைத்ததன் மூலம், நிலக்கரி அமைச்சகம் வணிக ஏலத்தின் கீழ் மொத்தம் 73 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஆணை வழங்கியுள்ளது. 
  • இதன் மூலம் மாநில அரசுகளுக்கு ஆண்டு வருமானமாக ரூ.23,097.64 கோடி கிடைக்கும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,01,847 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel