மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது / 3rd installment of tax distribution to state governments Rs. 1,18,280 crore has been released by the Central Government
இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்குப் பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு 2023 ஜூன் 12 அன்று விடுவித்துள்ளது.
மாநிலங்கள் அவற்றின் மூலதனச்செலவை விரைவுபடுத்தவும், மேம்பாடு மற்றும் செலவுகளுக்கு நிதி வழங்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கச்செய்யவும் ஏதுவாக 2023 ஜூன் மாதத்தின் இயல்பான தவணை நிலுவையோடு கூடுதலாக ஒரு தவணை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் இருந்து 2023 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.4825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
0 Comments