தொழில் 4.0 என்ற தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் / Chief Minister M. K. Stalin inaugurated the Industry 4.0 Technology Centers
தொழிலாளர் நலத்துறை சார்பில், சென்னை ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு ஐடிஐ-க்களில் ரூ.762.30 கோடியில் கட்டப்பட்ட `தொழில் 4.0' என்ற தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசு ஐடிஐயில் பயிலும் 5 மாணவிகளுக்கு வங்கிபற்று அட்டைகளை வழங்கினார். இதுதவிர, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்வழி பாடப் புத்தகங்களையும் வழங்கினார்.
தமிழகத்தில் 71 அரசு ஐடிஐ-க்களை, ரூ.2,877 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களை நிறுவி, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன் உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு 20 சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு தருகின்றன.
முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 22 அரசு ஐடிஐ-க்களில் ரூ.762.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரகடத்தில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
0 Comments