Recent Post

6/recent/ticker-posts

மின் வாகன பேட்டரி ஆலை அமைப்பது தொடர்பாக குஜராத் மாநில அரசு, டாடா குழுமம் இடையே ஒப்பந்தம் / Agreement between Gujarat state government and Tata Group for setting up electric vehicle battery plant

TAMIL

  • புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காரியமில வாயு வெளியேற்றத்தை 2070-க்குள் பூஜ்ஜிய நிலைக்கு குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தின் டாடா அகரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ் நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் கடந்த வாரம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மின் வாகன பேட்டரி தொழிற்சாலை நிறுவப்படும். இதில் லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கப்படும்.
  • இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் லித்தியம் பேட்டரி உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கும்.
  • கடந்த 2021-ல் இந்தியாவின் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.3,169 கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல்ரூ.12.58 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.7,680 கோடி மதிப்பிலான 45 கோடி லித்தியம் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்தது.
  • கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு மற்றும் 5ஜி நெட்வொர்க் ஆகியவற்றை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து வருகிறது. 
  • இது சர்வதேச மற்றும் பிராந்திய புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சவால்களை சமாளிக்க லித்தியம் பேட்டரிகள் முக்கிய பங்கு வகிக்கும். 
  • இந்த சூழலில் காஷ்மீரில் நிலத்துக்கடியில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் இருக்கும் அனைத்து நில உரிமையாளருக்கு உரிமை உண்டு. 
  • அதேநேரம் உணர்வுபூர்வமான தாதுப் பொருட்களை தனியார் எடுத்துக்கொள்ள மத்திய அரசு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

ENGLISH

  • The government led by Prime Minister Modi has set a target to reduce greenhouse gas emissions to zero by 2070.
  • Against this backdrop, Tata Group's Tata Agaradas Energy Storage Solutions signed an MoU with the Gujarat state government last week. According to this, an electric vehicle battery factory will be established at a cost of Rs.13 thousand crores. It will produce lithium-ion cells.
  • This will directly and indirectly provide employment to 13 thousand people. With the establishment of this factory, Gujarat will take the lead in lithium battery production.
  • In 2021, India's electric vehicle market was valued at Rs 3,169 crore. It is expected to increase to Rs.12.58 lakh crore by 2030. India imported 45 crore lithium batteries worth Rs 7,680 crore in the last financial year 2019-20.
  • The world is moving rapidly towards curbing carbon emissions, increasing the use of artificial intelligence technology and 5G networks.
  • This will change international and regional geopolitics. Lithium batteries will play an important role in overcoming these challenges.
  • In this context, lithium has been discovered underground in Kashmir. All landowners have the right to subterranean land.
  • At the same time, the Supreme Court ruled in 2013 that the central government can ban the private acquisition of sensitive minerals.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel