இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள வழக்கறிஞர்கள் பரஸ்பரம் மற்ற நாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இதில், இந்திய பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் சட்ட சொசைட்டி கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, பிரிட்டனில், சர்வதேச சட்டம் தொடர்பான பயிற்சியுடன், சட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நம் நாட்டைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் நேரடி பயிற்சி மேற்கொள்ள முடியும்.
அதே நேரத்தில், நம் வழக்கறிஞர்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வாதிட முடியாது. அதுபோல, பிரிட்டன் வழக்கறிஞர்களும் இங்கு பயிற்சி மட்டுமே எடுத்து கொள்ள முடியும்.
0 Comments