Recent Post

6/recent/ticker-posts

முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் துறையுடன் மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது / Directorate General of Re-employment signs MoU with private sector to provide employment to ex-servicemen




முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் ஐபிஎம் என்ற தனியார் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் உள்ள மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிகத்திறன் வாய்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு தனியார் நிறுவனத்தில் தேவையான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதையடுத்து ஐபிஎம் நிறுவனம் முன்னாள் படைவீரர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கும்.
ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு துறைகளில் 24,234 முன்னாள் படைவீரர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 

பாதுகாப்புப் படையில் இளைஞர்கள் இருக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமார் 60,000 வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர் அல்லது விடுவிக்கப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel