Recent Post

6/recent/ticker-posts

ஆர்டர் ஆப் தி நைல் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் எகிப்து அதிபர் / Order of the Nile awarded to Prime Minister Modi by the President of Egypt

  • பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
  • அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 
  • அதை தொடர்ந்து எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின் போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். 
  • மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். 
  • மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 
  • இந்நிலையில், எகிப்து அதிபர் அப்துல் பத அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், எகிப்து அதிபர் அப்துல் பதா அல் சிசி பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் தி நைல் விருதை வழங்கி கவுரவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel