சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்பதன் சுருக்கமாக லைஃப் என்ற கோட்பாட்டை கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி 26 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார்.
தண்ணீர் சேமிப்பு, எரிசக்தி சேமிப்பு, மின்னணுக் கழிவுகளை குறைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைத்தல், கழிவுப்பொருட்களைக் குறைத்தல், நீடிக்கவல்ல உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை பின்பற்றுதல் என்ற ஏழு மையப்பொருட்கள் லைஃப் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டன. இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல்தின மையப்பொருள் பிளாஸ்டிக் கழிவுக்கு தீர்வுகள் என்பதாக உள்ளது.
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
0 Comments