இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் - தமிழக அரசு அரசாணை வெளியீடு / Senthil Balaji to continue as Minister without Portfolio - Tamil Nadu Government Ordinance Release
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த 2 துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இது தொடர்பான கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.
இந்நிலையில் மாலை திடீரென கவர்னர் மாளிகையின் அரசு செயலாளர் ஆனந்த் பாட்டீல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு அரசின் பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றார்.
இருப்பினும் செந்தில் பாலாஜி கிரிமினல் வழக்குகளை எதிர் கொண்டு தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர் அமைச்சராக தொடர ஒப்புக் கொள்ள முடியாது.
இந்தநிலையில், ஆளுநர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசாணை பிறப்பித்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 Comments