Recent Post

6/recent/ticker-posts

மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க மத்திய அரசின் பிரத்யேக அறிவிப்பு / A special announcement by the Central Government to revitalize soil fertility, food security, promote sustainable and sustainable environment and protect the welfare of farmers.

  • மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க பிரத்யேக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
  • விவசாயிகளுக்கு ரூ.3,70,128 கோடி செலவிலான புத்தாக்கத் திட்டங்களைக் கொண்ட பிரத்யேக தொகுப்பிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (சிசிஇஏ) இன்று (28.06.2023) ஒப்புதல் அளித்துள்ளது. 
  • நிலையான வேளாண்மையை முன் நிறுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாடுட்டிற்கும், ஒட்டுமொத்த நலனுக்கும் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கும். 
  • இந்த முன்னெடுப்புகள் விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிப்பதுடன், இயற்கை வேளாண்மையை வலுப்படுத்தி, மண் வளத்தைப் புத்துயிர் பெறச்செய்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்.
  • இதேபோல் யூரியா மானியத்திட்டத்தைத் தொடர சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ரூ.242க்கு விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையின் சந்தை விலை ரூ.2,200 ஆகும். 
  • உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க யூரியா மானியத் திட்டத்தை தொடர்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25) யூரியா மானியத்திட்டத்திற்கு ரூ.3,68,676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2025-26-ஆம் நிதியாண்டில் 195 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 8 நானோ யூரியா ஆலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இதே போல் மண் வளத்தை மேம்படுத்தி புத்துயிரூட்ட புத்தாக்க நடைமுறைகளைக் கொண்ட தொகுப்பிற்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி விவசாயக் கழிவுகளிலிருந்து வருமானத்தை ஈட்ட வகை செய்யும் சந்தை வளர்ச்சி உதவித் திட்டத்திற்கு ரூ.1,451 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயோ-கேஸ் ஆலைகள் மற்றும் உயர் அழுத்த பயோ-கேஸ் ஆலைகளை கோபர்தன் திட்டத்தின் கீழ் அமைத்து இயற்கை உரங்களையும், பாஸ்பேட் ஊட்டச்சத்துமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக கந்தகப் பூச்சுக் கொண்ட யூரியாவை அறிமுகம் செய்யும் முயற்சிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணின் கந்தகக் குறைப்பாட்டை நீக்குவதுடன் மண் வளத்தைப் பாதுகாத்து விவசாயிகளின் செலவும் குறைக்கப்படும்.
  • இந்த யூரியா தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பம் பூச்சு யூரியாவைவிடக் குறைந்த செலவிலானது. இதன் மூலம் விவசாயிகளின் உரத்திற்கான செலவு குறைவதுடன், உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வருமானத்தையும் மேம்படுத்த முடியும்.
  • நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரதமரின் கிசான் சம்ருதி மையங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் இந்த மையங்களில் கிடைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel