முதியோர் உதவிதொகை ரூ.1,200ஆக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு / Tamil Nadu cabinet meeting decided to increase the senior citizen allowance to Rs.1,200
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அதில், தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி கூடுதலாக செலவாகும்.
முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்.
0 Comments