Recent Post

6/recent/ticker-posts

உத்தர பிரதேசத்தில் ரூ.12,600 கோடி, சத்தீஸ்கரில் ரூ.7,600 கோடி திட்டங்கள் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Rs 12,600 crore projects in Uttar Pradesh, Rs 7,600 crore projects in Chhattisgarh - Prime Minister Narendra Modi launched

  • சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில்  நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ராய்ப்பூர் - கோடெபோட், பிலாஸ்பூர்- பத்ரபாலி இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • ராய்ப்பூர்-காரியார் இடையே 103 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையும், கியோட்டி - அந்தகர் இடையே 17 கிமீ புதிய ரயில் பாதையையும், கோர்பாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கான ஆலையையும் அவர் தொடங்கி வைத்தார். 
  • இதுதவிர்த்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளர் அட்டை விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அந்தகர் மற்றும் ராய்பூர் இடையே புதிய ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
  • ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
  • உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் செயல்படும் கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
  • இதன்பிறகு கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி கோரக்பூர்- லக்னோ, ஜோத்பூர்- அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • இதன்பிறகு தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் ரூ.12,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel