மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப் பணித் தேர்வு 2022-ன் எழுத்துத் தேர்வு மற்றும் மற்றும் 2023 ஜூன் மாதத்தில் நடைபெற்ற நேர்காணலின் அடிப்படையில் இந்திய வனப் பணியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு 147 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பிரிவில் 39 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 21 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 54 பேரும், பட்டியல் இனத்தவர்களில் 22 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களில் 11 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் ஆணைய வளாகத்தில் உள்ள மையத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்தேகங்களை வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரிலும், 011-23385271, 011-23098543 மற்றும் 011-23381125 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் மதிப்பெண்கள் விரைவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
0 Comments