ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள ஹுவாங்சோவ் நகரில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி தரவரிசையிலில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட, இவான் யூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி 11-10, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments