Recent Post

6/recent/ticker-posts

ஒருங்கிணைந்த கடற்படை பயிற்சியான ‘ஆபரேஷன் தெற்குலகின் தயார்நிலை - 2023’ / Combined Naval Exercise 'Operation Southern Readiness - 2023



ஒருங்கிணைந்த கடற்படைகளால் நடத்தப்படும் பயிற்சியான ஆபரேஷன் தெற்குலகின் தயார்நிலை 2023-ல் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் சுனைனா கப்பல் 2023 ஜூலை 10-12 -ம் தேதி வரை செஷல்ஸ் நாட்டிற்குச் சென்றது. இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. பன்னாட்டு முயற்சியான CMF பயிற்சியின் மூலம் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். கப்பலை செலுத்துதல், விபிஎஸ்எஸ் (அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி), விபத்துகளின்போது மக்களை வெளியேற்றுவதற்கான பயிற்சிகள் போன்றவை இப்பயிற்சியின்போது விளக்கப்பட்டன.

பின்னர் கப்பலின் பணியாளர்கள், செஷல்ஸ் பாதுகாப்புப் படைகள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு யோகா அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel