Recent Post

6/recent/ticker-posts

ராஜஸ்தானின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / In Rajasthan's Bikaner Prime Minister Narendra Modi laid the foundation stone for development projects worth Rs 24,300 crore and dedicated the completed projects to the country.

  • ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08-07-2023) அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • சுமார் ரூ. 11,125 கோடி செலவிலான அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவு, சுமார் ரூ.10,950 கோடி மதிப்புள்ள பசுமை எரிசக்தி வழித்தடத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற பாதையின் முதல் கட்டம், சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் உருவாக்கும் பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும். 
  • பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை, சுமார் ரூ.450 கோடி செலவில் பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், 43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel