ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களையும், 3 ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கிகளையும் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
இந்திய கடற்படையின் தேவையை கருதி, 26 கடல்சார் ரபேல் போர் விமானங்களையும், மூன்று ஸ்கார்பியன் கிளாஸ் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளையும் பிரான்சிடம் இருந்து பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே இது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, இவற்றில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள், விமான உபகரணங்கள் மற்றும் விமானிகள் பயிற்சி மற்றும் தளவாட உதவி ஆகியவையும் பிரான்சிடமிருந்து கிடைக்கும். கூடுதலாக, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செயல்பாடுகள், உள்நாட்டு ஆயுதங்களை இந்த விமானங்களில் இணைப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். பிரான்ஸ் அரசுடன் நடத்தும் பேச்சு அடிப்படையில் விமானங்களுக்கான விலை இறுதி செய்யப்படும்.இந்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களையும், பிரான்சுடன் இணைந்து மேஸகான் கப்பல் கட்டுமான நிறுவனம் மும்பையில் கட்டமைக்கும். இதில், உள்நாட்டு உபகரணங்கள் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
0 Comments