Recent Post

6/recent/ticker-posts

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு 3ம் மாநிலமாக தேர்வு / Tamil Nadu selected as 3rd state in process for State Food Security Index

  • புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு வணிகங்களுக்கான உரிமம், பதிவுச் சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டியில் இந்திய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டன. 
  • வெற்றி பெற்றது என தேர்வு செய்யப்பட்ட 31 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை பெற்றுள்ளது.
  • இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2022-2023ம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது.
  • இதனிடையே தலைமை செயலகத்தில் நேற்று 'ஈட் ரைட் சேலஞ்' போட்டியில் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக வழங்கப்பட்ட விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துகள் பெற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel