உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 34 நீதிபதிகள் பணியிடம் உண்டு. கடந்த மாதம் 3 நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் தற்போது 31 பணியிடம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தியது.
அப்போது தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடநாராயண பாட்டி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இதில் நீதிபதி உஜ்ஜல் புயான் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011 அக்டோபர் 17ம் தேதி நியமிக்கப்பட்டவர். நீதிபதி வெங்கடநாராயண பாட்டி ஆந்திராஉயர் நீதிமன்ற நீதிபதியாக 2013 ஏப்ரல் 12ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments