Recent Post

6/recent/ticker-posts

மங்கோலியா பார்லி.,யுடன் மத்திய அரசு ஒப்பந்தம் / Central Government Agreement with Mongolian Parliament

  • லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான பார்லிமென்ட் குழு, மங்கோலியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணத்தின்போது, மங்கோலியாவில் உள்ள புத்த மதத்தின் கன்டான் தேக்சென்லிங் பிரிவின் மடத்துக்கு ஓம்பிர்லா சென்றார். 
  • அவரை புத்த மதத் தலைவர்கள் வரவேற்றனர். அப்போது, இந்தியா மற்றும் மங்கோலியாவுக்கு இடையே உள்ள புத்த மதத் தொடர்புகள் குறித்து ஓம்பிர்லா குறிப்பிட்டார்.
  • இரு நாடுகளுக்கும் இடையே புத்த மதத்தை பரப்புவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக, புத்த மதத் தலைவர் கம்பா நோமுன் கானுக்கு, கலாசார உறவுக்கான இந்திய கவுன்சிலின் புத்தர் விருதை ஓம் பிர்லா வழங்கினார்.
  • இதைத் தொடர்ந்து, புத்த மதத்தின் பொதுப் பிரிவு மடத்துக்கும் ஓம் பிர்லா சென்றார். அங்கு நிறுவப்பட்டுள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். மங்கோலியாவின் நதாம் விழாவில் ஓம் பிர்லா தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது. 
  • மங்கோலிய போர்க் கலை, பாரம்பரிய கலைகள், உணவுகள் மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற அந்த நாட்டின் பார்லிமென்ட் சபாநாயகர் கோம்போஜாவின் ஜன்டான்ஸ்தார், ஓம் பிர்லாவுக்கு குதிரை ஒன்றை பரிசாக அளித்தார். 
  • அதற்கு, 'விராட்' என பெயர் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு பார்லிமென்ட் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel