Recent Post

6/recent/ticker-posts

இந்தியா – பிரான்ஸ் கடல்சார் கூட்டுப் பயிற்சி / India-France Joint Maritime Exercise

TAMIL

  • வங்காள விரிகுடாவில் இந்தியக் கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் சுமேதா ஆகியவை 2023 ஜூன் 30-ம் தேதியன்று பிரான்ஸ் கடற்படைக் கப்பலான FS Surcouf உடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன. 
  • ஜூன் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் இருந்த Surcouf கப்பல், இந்தியக் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றது.
  • விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும்போது, FS Surcouf கப்பலானது இந்தியக் கடற்படை கப்பல்களான ராணா மற்றும் சுமேதாவுடன் இணைந்து போர் விமானங்களுக்கு எதிரான வான் பாதுகாப்பு மற்றும் கிராஸ் டெக் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டது. இந்தியக் கடற்படைக்கும் பிரான்ஸ் கடற்படைக்கும் இடையேயுள்ள வலுவான நட்பை இந்தப் பயிற்சி குறிக்கிறது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் 10,11 ஆகிய தேதிகளில், FS La Fayette என்ற போர்க்கப்பல் ஐஎன்எஸ் சஹ்யாத்ரியுடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டது.

ENGLISH

  • Indian Navy ships INS Rana and INS Sumedha conducted maritime joint exercise with French Navy ship FS Surcouf on June 30, 2023 in Bay of Bengal.
  • From June 26 to 29, Surcouf, which was in Visakhapatnam, participated in various operations along with Indian Navy vessels.
  • While departing Visakhapatnam, FS Surcouf conducted various exercises including anti-aircraft air defense and cross-deck helicopter operations along with Indian Navy ships Rana and Sumeda. The exercise symbolizes the strong friendship between the Indian Navy and the French Navy.
  • Earlier this year on March 10 and 11, frigate FS La Fayette conducted a joint maritime exercise with INS Sahyadri.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel