ராணுவ அமைச்சகம் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடையே, நம் ராணுவ வீரர்களிடம் சிறுதானிய உணவுமுறைகளை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் ராணுவ வீரர்களிடையே சிறுதானியம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.ராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள மெஸ், கேன்டீன்கள், பிற உணவு விற்பனை நிலையங்களில் சிறுதானியங்களில் செய்யப்பட்ட மெனுக்களை அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும்.
0 Comments