சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார் / The Sahara Refund website was launched by Union Home and Cooperatives Minister Amit Shah
கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் - சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை https://mocrefund.crcs.gov.in/ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்.
நான்கு கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட சஹாரா குழுமத்தின் உண்மையான டெபாசிட்தாரர்கள் உரிமை கோரல்களை சமர்ப்பிப்பதற்காக இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சஹாரா குழுமத்தில், பணம் செலுத்தி திரும்ப பெற முடியாதவர்களின் கவலையை மனதில்கொண்டு இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சஹாரா குழும நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் இணையதளம் மூலம் இந்த இணையப்பக்கத்தை அணுகி அதில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இத்துடன் தேவைப்படும் ஆவணங்களையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிமைகோரல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்பட்டபின், நிதி இருப்பைப் பொறுத்து, உண்மையான டெபாசிட்தாரர்களுக்கு 45 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
0 Comments