ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்திய ரூபாயில் வர்த்தகம் - பிரதமர் மோடி, அதிபர் ஷேக் முகமது பேச்சுவார்த்தையில் உடன்பாடு / Trade in Indian rupee in UAE - Prime Minister Modi, President Sheikh Mohammed agreed in talks
பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் பிரான்ஸ் சென்ற அவர் அங்கு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார்.
அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பான முறையில் வரவேற்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை இந்திய தேசியக்கொடி அசைத்து குழந்தைகள் வரவேற்றனர்.
அதன்பின் அதிபருடனான சந்திப்பில் எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இரு நாடுகளும் இந்திய ரூபாய் மற்றும் யுஏஇ நாணயம் அடிப்படையில் வர்த்தகம் நடத்த ஒப்புக்கொண்டன. இதன் அடிப்படையில் இரு நாடுகளின் கரன்சிகளில் வர்த்தகம் நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
0 Comments