விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், செங்கல், சில்லு வட்டம், கிண்ணம் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வில் சுடுமண்ணால் ஆன கருப்பு, சிவப்பு நிற பானை, கூம்பு மற்றும் வட்ட வடிவ அகல் விளக்கு கண்டெடுக்கப்பட்டது.
0 Comments