Recent Post

6/recent/ticker-posts

பாரத் பருப்பு என்ற பெயரில் மானிய விலையில் விற்கப்படும் பருப்பு விற்பனையை மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் / Union Minister Mr. Piyush Goyal launched the sale of subsidized pulses under the name Bharat Paruppu.

  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மானியத்துடன் கூடிய கடலைப் பருப்பு விற்பனையை 'பாரத் பருப்பு' என்ற பெயரில் தொடங்கி வைத்தார். இந்தப் பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 30 கிலோவாக வாங்கும்போது ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
  • தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்படவுள்ளதோடு, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
  • கடலைப்பருப்பு இந்தியாவில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் ஒன்றாகும். துவரம்பருப்புக்கு மாற்றாக வறுத்த கடலைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 
  • இரத்த சோகை, சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தவும் கடலைப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற பல ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel