Recent Post

6/recent/ticker-posts

10-வது முறை செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி / Prime Minister Modi hoisted the flag at the Red Fort for the 10th time


இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் 1,000 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி செங்கோட்டை பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள் 1,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர். 

தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு 10-வது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

கடந்த 2014-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது. 

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel