Recent Post

6/recent/ticker-posts

முதலமைச்சரின் சுதந்திர தின விருதுகள் 2023 / CHIEF MINISTER'S INDEPEDENCE DAY AWARD 2023


முதலமைச்சரின் சுதந்திர தின விருதுகள் 2023 / CHIEF MINISTER'S INDEPEDENCE DAY AWARD 2023: நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள 119 அடி உயர கம்பத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் காவல்துறை அதிகாரிகள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

1. தகைசால் தமிழர் விருது
  • முனைவர். கி. வீரமணி,
2. டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது
  • முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமி, கணினித்துறை பேராசிரியர், வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகம், வேலூர் மாவட்டம்
3. துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது
  • திருமதி. நா. முத்தமிழ்செல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.
4. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது
  • முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் - கண்காணிப்பு செல்லிட செயலி - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
  • ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய சிகிச்சை மேற்கொள்ளல் - மருத்துவர். E. தேரணி ராஜன், முதல்வர், சென்னை மருத்துவ கல்லூரி
  • பள்ளிக்கூடத் திட்டம் – பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு -
  • திரு. வெ. பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோயம்புத்தூர்
5. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை
  • புரிந்த சிறந்த மருத்துவர் - மரு. த. ஜெயக்குமார், சென்னை.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனம் - சாந்தி நிலையம், கன்னியாகுமரி.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் - திரு. ரத்தன் வித்யாகர், கோயம்புத்தூர்.
  • மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் - டெடி எக்ஸ்போர்ட், மதுரை.
  • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு - வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இராமநாதபுரம்.
6. சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான விருதுமகளிர் நலனுக்காக பணியாற்றிய
சிறந்த தொண்டு நிறுவனம்
  • கிராமத்தின் ஒளி, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
  • மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் - திரு. D. ஸ்டான்லி பீட்டர், கோயம்புத்தூர் மாவட்டம்.
7. சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்
  • முதல் பரிசு – 9வது மண்டலம்
  • இரண்டாம் பரிசு – 5வது மண்டலம்
சிறந்த மாநகராட்சிகள்
  • முதல் பரிசு – திருச்சிராப்பள்ளி
  • இரண்டாம் பரிசு – தாம்பரம்
சிறந்த நகராட்சிகள்
  • முதல் பரிசு - இராமேசுவரம்
  • இரண்டாம் பரிசு – திருத்துறைப்பூண்டி
  • மூன்றாம் பரிசு - மன்னார்குடி
சிறந்த பேரூராட்சிகள்
  • முதல் பரிசு – விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்
  • இரண்டாம் பரிசு – ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
  • மூன்றாம் பரிசு – வீரக்கல்புதூர், சேலம் மாவட்டம்
8. முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்

ஆண்கள் பிரிவு (3+1)
  1. திரு. சி. தஸ்தகீர், நீலகிரி மாவட்டம்.
  2. திரு. ரா. தினேஷ் குமார், திருச்சி மாவட்டம்.
  3. திரு. கோ.கோபி, இராணிப்பேட்டை மாவட்டம்.
  4. திரு. ப. இராஜசேகர், செங்கல்பட்டு மாவட்டம் (சாகச விளையாட்டு)
பெண்கள் பிரிவு (3)
  1. செல்வி. மு. விஜயலட்சுமி, சென்னை மாவட்டம்.
  2. செல்வி. செ. சந்திரலேகா, மதுரை மாவட்டம்.
  3. செல்வி. தா. கவிதா தாந்தோனி, காஞ்சிபுரம் மாவட்டம்.
9. போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்
  1. திரு. ஆஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர், தெற்கு மண்டலம் (முன்னாள்), மதுரை.
  2. திரு. வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோயம்புத்தூர் மாவட்டம்
  3. திரு. டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்.
  4. திரு.மா.குணசேகரன், காவல் உதவி ஆணையர், மத்திய குற்றப் பிரிவு, கோயம்புத்தூர் மாவட்டம்
  5. திரு. சு.முருகன், காவல் உதவி ஆய்வாளர், நாமக்கல் காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம்
  6. திரு. ஆர்.குமார், முதல்நிலைக் காவலர், 1380, நாமக்கல் மாவட்டம்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel