மத்திய தொல்லியல் துறை சென்னை வட்டம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள், மே மாதம் துவங்கப்பட்டன.
தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், ஆறு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில், 800 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக, கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் உள்ளிட்டவை, கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, முக்கிய தொல்பொருளாக கருதப்படுகிறது. இப்பானை ஓட்டில், 'மத்தி' என்ற தமிழி எழுத்துக்கள் உள்ளன.
இதுவரை, தமிழகத்தின் வடக்கில், காஞ்சிபுரம் பட்டரைப்பெரும்புதுார் போன்ற இடங்களில் மட்டுமே, 'தமிழி' என்ற தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
0 Comments